அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Wednesday, January 27, 2010

ஒரு கோப்பையிலே..........

"என்ன மாம்ஸ், பிரமோஷனா, பார்ட்டி எப்ப?"
"கலக்கிட்டீங்க சார், இதுக்கே ஒரு ஸ்பெஷல் பார்ட்டி கொடுக்கணும் நீங்க"
"என்னது வெறும் ஸ்வீட்டா, நத்திங் டூயிங், ஒன்லி பார்ட்டி"
என்றெல்லாம் எடுத்ததற்கெல்லாம், வலது கையை உயர்த்தி முழங்கையை இடது கையால் தொடுபவர்களா, நீங்கள்? அப்படிஎன்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான்.



ஒரு மாதம் முன்பு என் அலுவலக சகா ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபொழுது, அவர் சொன்னார், "சார், பாண்டிச்சேரி போனா, அங்க பக்கத்தில இருந்தவங்க ரெண்டு பேரு ஒரு புல் பாட்டிலை அரை மணி நேரத்திலே காலி பண்ணினாங்க சார், ஆனா அவங்க குடிச்ச மாதிரியே இல்ல, ரொம்ப சாதாரணமா ஏதோ கூல் டிரிங் குடிக்கிற மாதிரி இருந்தாங்க. குடிக்கும்போது பார்த்ததால எனக்கு தெரியும் இல்லன்னா, என்னாலேயே கூட கண்டுபிடிச்சிருக்க முடியாது. நான் நினைக்கிறேன், அதுனாலதான் பாண்டிச்சேரி சரக்குக்கே ஒரு மவுசு இருக்குன்னு. நம்மூர் சரக்கு ஒரு கட்டிங் விட்டாகூட அன்னைக்கு முழுக்க வாடை வந்துகிட்டே இருக்கு".

இதைப் படிச்சவுடனே இப்பவே ஒரு பாண்டிச்சேரி பஸ்ஸை பிடிக்க கிளம்பிடாதீங்க. மேல படியுங்க.



Thursday, January 21, 2010

வாழ்க்கை - முயற்சி

எல்லோருக்குமே வாழ்வில் சிறந்த நிலையை அடைய வேண்டும் என்ற ஆசை உண்டு. பெரும்பாலான மக்களின் மனநிலையை ஒட்டி கீழே சில கேள்விகளும் அதற்கான பதில்களும்:



1 வாழ்க்கையில் சீக்கிரம் நல்ல உயரத்திற்குச் செல்ல என்ன வழி?

2 சில வாரங்களிலேயே கோடீஸ்வரன் ஆவது எப்படி?

3. உலகம் முழுவதும் உங்கள் பெயரை உச்சரிக்க என்ன செய்ய வேண்டும்?

4. கின்னஸ் புத்தகத்தில் உங்கள் பெயரும் இடம் பெற என்ன செய்ய வேண்டும்?

Sunday, January 17, 2010

மன்னார்குடி கோயில் பொங்கல் திருவிழா - நான்காம் நாள்

ஒவ்வொரு வருடமும் பொங்கல் சமயத்தில் தை மாதம் 4-ந்தேதி மன்னார்குடி அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் "ஏக சிம்மாசனம்" என்னும் திருவிழா நடைபெறும். அன்றைய தினம், இராஜகோபாலசுவாமி, ருக்மணி, சத்தியபாமா மற்றும் செங்கமலத் தாயார் என்று நான்கு மூர்த்திகளையும் ஒரே ஊஞ்சலில் தரிசிக்கலாம். இன்று அந்தத் திருவிழா நடைபெற்றது. உங்களுக்காக அந்த காட்சியை ஒளிப்பதிவு செய்து கீழே வெளியிட்டுள்ளேன்.

தரிசித்துப் பயன் பெருக.

கோபாலன் அருளால் இவ்வையகம் செழித்து விளங்கட்டும்!


Tuesday, January 12, 2010

கையில் என்ன...........கொண்டு வந்தோம், கொண்டு செல்ல!

maddy73 தன்னுடைய பதிவு ஒன்றில் இந்த செய்தியை ஆங்கிலத்தில் வெளியிட்டு அதை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய என்னை வேண்டியிருந்தார்.  அதை சிரமேற்கொண்டு, செய்து விட்டேன்.  (எனக்கு ஒரு பதிவு கணக்கு ஆயிற்று.  நன்றி maddy73)
  
மாவீரன் அலெக்சாண்டர் எல்லா நாடுகளையும் வெற்றி கொண்டு, தன் நாடு திரும்பும் வழியில் உடல் சுகவீனப் பட்டு படுக்கையில் கிடந்தார். மரணம் தன்னை நெருங்கி வருவதை உணர்ந்த அவர், தான் பெற்ற வெற்றி, தன்னுடைய பெரிய போர்ப்படை, வீர வாள், திரண்ட செல்வம் எல்லாம் வீணாகிப் போவதை அறிந்தார்.



தன்னுடைய படைத் தளபதியை அழைத்த அவர், "எப்படியும் சில நாட்களில் நான் இறந்து விடுவேன். என்னுடைய மூன்று விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.  கண்ணீர் வழிய நின்ற தளபதியும் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

"என்னுடைய முதல் ஆசை, என்னுடைய சவப்பெட்டியை என்னுடைய மருத்துவர்களே தூக்கி செல்ல வேண்டும்.இரண்டாவதாக, என்னுடைய இறுதிப் பயணத்தின்போது, கல்லறை வரை வழியெங்கும் நான் சம்பாதித்த தங்க, வைர, வைடூரிய பொருட்களை இறைத்தபடி செல்ல வேண்டும்.  மூன்றாவதாக, சவப் பெட்டிக்குள் என்னை வைக்கும்போது, என் இரண்டு கைகளையும் வெளியில் தெரியும்படி வைக்க வேண்டும்" என்றார்.

கூடி இருந்த மக்களெல்லாம் இந்த வித்தியாசமான வேண்டுகோள்களைக் கேட்டு வியந்தனர்.  ஆனால் ஒருவரும் அவரைக் கேட்க தயங்கினர்.  அலெக்ஸாண்டருடைய நம்பிக்கைக்குரிய படைத் தலைவர் மட்டும் அவரை நெருங்கி அவர் கையை முத்தமிட்டு, அவரிடம், "மன்னர் அவர்களே, உங்கள் ஆசையை நிச்சயம் பூர்த்தி செய்வோம்.  ஆனால், இந்த ஆசைக்கான காரணம் மட்டும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்றார்.

ஒரு நீண்ட மூச்சு விட்டபின், அலெக்ஸாண்டர் சொன்னார், "மூன்று விஷயங்களை மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.  முதலாவதாக, மருத்துவர்களால் போகும் உயிரை நிறுத்த முடியாது, என்பதை உணர்த்தவே, என்னுடைய சவப்பெட்டியை அவர்களை விட்டு எடுத்து செல்ல விரும்புகிறேன்.  இதன் மூலம் மக்கள் வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

"ஒரு மனிதன் இறந்து போகும்போது, தான் சம்பாதித்த சிறு துரும்பைக் கூட எடுத்துச் செல்ல முடியாது, எனவே, பணம், பொருள் மீது ஆசை கொண்டு அலைவதை மக்கள் நிறுத்த வேண்டும்.  இதை வலியுறுத்தும் விதமாகத்தான், என் சவப்பெட்டி செல்லும் வழி எங்கும் தங்க, வைர பொருட்களை இறைத்துச் செல்லவேண்டும் என்று இரண்டாவது ஆசையை தெரிவித்தேன்.

"நான் பிறக்கும்போதும் ஒன்றும் கொண்டு வரவில்லை, இறந்தபிறகும் என்னோடு எதுவும் எடுத்துச் செல்லவில்லை என்பதை இந்த உலகத்துக்கு தெரிவிக்கவே, என் இரண்டு கைகளையும் சவப்பெட்டிக்கு வெளியே தெரியுமாறு வைக்க மூன்றாவது ஆசையை வெளியிட்டேன்".

அலெக்ஸாண்டரின் கடைசி வார்த்தைகள் : "நான் இறந்தபிறகு, என்னைப் புதையுங்கள், எந்த நினைவுச் சின்னமும் வேண்டாம்.  என்னுடைய இரண்டு கைகளையும் சவப்பெட்டியின் வெளியே தெரியுமாறு செய்யுங்கள்; இந்த உலகத்தையே வென்ற ஒருவன், மரணத்திற்கு பிறகு தன்னுடன் ஒன்றும் கொண்டு செல்லவில்லை என்பதை இந்த உலகம் அறிந்து கொள்ளட்டும்."

பொங்கல் வாழ்த்துகள்

உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் என் உளங்கனிந்த 



பொங்ல் வாழ்த்துள்.
தொலையட்டும் துன்பம்
வளரட்டும் இன்பம்
பொங்கட்டும் வளமை
தங்கட்டும் இளமை
வாழ்த்துகளுடன்

வாழ்க்கை - தற்பெருமை

கர்வம், அதாவது தற்பெருமை இல்லாத மனிதன் என்று யாருமே இல்லை. கல்விச் செருக்கு என்பதை இலக்கியமே ஒப்புக் கொள்கிறது.  பெரும்பாலான கவிஞர்களின் கவிதைகளில் இந்தக் கல்விச் செருக்கு வெளிப்படையாகவே தெரியும்.

ஆனால், "எனக்குத் தெரியும்" என்பதற்கும் "எனக்கு மட்டும்தான் தெரியும்" என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.


Sunday, January 10, 2010

போலியோ சொட்டு மருந்து - இன்று


மறந்துடாதீங்க.  ஐந்து வயது வரை உள்ள உங்கள் குழந்தைகளுக்கு அருகில் உள்ள பள்ளிக்கோ, பேருந்து நிலையத்துக்கோ சென்று போலியோ சொட்டு மருந்து கொடுத்து நம் நாட்டு எதிர்காலத் தூண்களை வலிமையானவர்களாக ஆக்க உதவி செய்யுங்கள்.

Saturday, January 2, 2010

புத்தாண்டு வாழ்த்துகள் - 2010