அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Friday, April 2, 2010

வாழ்க்கை - கற்பு

 -----------------------------------------------------------------------------------

இந்த வார துக்ளக்கில் வந்த ஒரு தொடர் (ராண்டார் கை அனுபவங்கள்) பற்றி இந்த பதிவு.

மேற்கண்ட தொடரில் ராமாபட்டினம் ஜமீந்தார் கேஸ் பற்றி எழுதியிருக்கிறார்கள். அதில் ஒரு விஷயம் என்னவென்றால் ராமாபட்டினம் ஜமீன்தார் வேறு ஒரு பெரிய எஸ்டேட் முதலாளியின் இரண்டாம் தாரத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் அதற்கு அந்த எஸ்டேட் முதலாளி எப்படி பழி தீர்த்துக் கொண்டார் என்றும் எழுதப் படுகிறது.

எனக்குத் தோன்றியது இதுதான்; ஒரு ஆண் இன்னொரு ஆணின் மனைவியைக் காதலிக்கிறார். அவர் என்னவென்றால் இரண்டு மனைவிகள் வைத்திருக்கிறார். ஆக, இவர் செய்தது ஒரு வகையில் தவறு என்றால் அவர் செய்ததும் தவறுதானே.  ஊருக்கே தெரிந்து இரண்டு தாரம் வைத்திருப்பது எப்படி தவறு ஆகும் என்று யாரும் எதிர் கேள்வி கேட்க வேண்டாம்.  பொதுவாகவே, நம் சமுகத்தில் ஆண் எவ்வளவு பெண்களை வேண்டுமானாலும் விரும்பலாம் ஆனால் பெண் மட்டும் ஒருவனையே நினைத்து வாழ வேண்டும்.

அதற்காக, பெண்களும் பலரை மணந்து, புரட்சி செய்ய வேண்டும் என்று சொல்ல வரவில்லை.  கற்பு என்பது இருபாலருக்கும்தான் என்பது என் கருத்து.பாரதி கூட கற்பை இருபாலருக்கும் பொதுவாக வைத்துத்தான் கவிதை புனைகிறான்.

ஒரு முறை சொந்த ஊரிலிருந்து வேறொரு ஊருக்கு பணி மாற்றம் காரணமாக நான் செல்ல வேண்டியிருந்தது.  முதலில் நான் மட்டும் அந்த ஊருக்கு சென்று பிறகு குடும்பத்தை அங்கு அழைத்துச் செல்ல திட்டம்.  அதற்காக அந்த ஊரில் வாடகைக்கு வீடு தேடிக் கொண்டிருந்தபோது ஒரு நண்பர் விளையாட்டாகச் சொன்னார் :
"ஏம்பா, இருக்கப் போவது இங்க இரண்டு வருஷம்தான். அதுக்கு ஏன் குடும்பத்தை இங்க கூட்டிக்கிட்டு வரணும்? பேசாம இங்கயே ஒரு குடும்பத்தை செட் பண்ணிக்கிட்டு இருக்க வேண்டியதுதான?"

அதற்கு நானும் விளையாட்டாகச் சொன்னேன், "சரிதான் பா. ஆனா, இரண்டு வருஷம் கழித்து என் சொந்த ஊருக்குத் திரும்பிப் போகும்போது அங்க என் மனைவி வேற ஒரு குடும்பத்தை செட் பண்ணியிருந்தா என்ன பண்றது?"

இதில் நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். எப்படி ஒரு மணமான பெண்ணுக்கு பிற ஆடவர்களிடத்தில் ஆசை கூடாது என்று விரும்புகிறோமோ அதுபோல் ஒரு மணமான ஆணுக்கு பிற பெண்களிடத்தில் எள்ளளவும் ஆசை வரக்கூடாது.

"இப்பிறவியில் பிற மாதரை சிந்தையாலும் தொடேன்" என்ற ராமனை வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும் என்பதே என் இறுதி வரிகள்.

4 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Chitra said...

நல்ல பகிர்வு. நன்றி.
50 வது பதிவுக்கு இப்பொழுதே வாழ்த்துக்கள்! சுறாவில் இருந்து துக்ளக் வரை தலைப்பா இல்லை..... 50!!!
:-)

மன்னார்குடி said...

வாழ்த்துக்கள்.

R.Gopi said...

//"இப்பிறவியில் பிற மாதரை சிந்தையாலும் தொடேன்" என்ற ராமனை வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும் என்பதே என் இறுதி வரிகள்.//

பிரமாதம் தலைவா....

மிக மிக நல்ல மற்றும் உயர்வான சிந்தனை....

Madhavan Srinivasagopalan said...

//"சரிதான் பா. ஆனா, இரண்டு வருஷம் கழித்து என் சொந்த ஊருக்குத் திரும்பிப் போகும்போது அங்க என் மனைவி வேற ஒரு குடும்பத்தை செட் பண்ணியிருந்தா என்ன பண்றது?"//

முதலில் சிரிக்க வைச்சாலும், ரொம்ப சிந்திக்க வச்சிட்டீங்க தலைவா..