அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, November 29, 2010

தமிழ்மணம் டாப் 20 - ஒரு அலசல்

வர வர நம்ம பதிவர்கள் ஒழுங்கா எழுதுறாங்களா இல்லையான்னே தெரியல.

பாருங்க, நம்ம தமிழ்மணம் வாராவாரம் டாப் 20 பட்டியல் வெளியிடறது உங்களுக்கே தெரியும்.

அதில முதல் வாரத்துல நம்ம கோகுலத்தில் சூரியன் எட்டாவது இடத்துல இருந்தாரு. போன வாரம் முதல் இருபது இடத்துலேயே இல்ல. இந்த வாரம் பதினஞ்சாவது இடத்துல 
இருக்காரு.

நம்ம மங்குனி அமைச்சர் முதல் வாரம் இரண்டாவது இடத்துல இருந்தார். போன வாரம் எட்டாவது இடத்துக்கு போனார். இந்த வாரம் முதல் இருபது லிஸ்ட்ல இல்ல.

இப்ப புதுசா நம்ம ரமேஷ் புதுசா பதினாலாவது இடத்துல இருக்காரு.

ஆனா, நானு எப்பவுமே ஒரே மாதிரிதான் எழுதுவேன். அதுனாலதான், பாருங்க, நான் இருபத்தொன்னாவது இடத்துல இருக்கேன். அது மட்டுமில்ல, ஒருவேளை, தமிழ்மணம் முதல் ஐம்பது இடம் லிஸ்ட் போட்டா, நான் அம்பதொன்னாவது இடத்துல இருப்பேன். இருந்தா அந்த மாதிரி மெயின்டெயின் பண்ணனும். 

என்ன, நான் சொல்றது சரிதானே?

டிஸ்கி : இந்த "பொறாமை", "வயித்தெரிச்சல்" அப்படின்னுலாம்  சொல்றாங்களே, அப்படின்னா என்னாப்பா?

Saturday, November 27, 2010

லிவிங் டுகெதர் - ரொம்ப முக்கியம்

முன் டிஸ்கி : யப்பா, இந்த ப்ளாக் உலகத்தில ரெண்டு நாள் வரலேன்னா கூட மனசு பரபரங்குது! ஒரு வாரம் கழிச்சு வந்தா, என்ன ஆவுறது?

லிவிங் டுகெதர் - இந்த வார்த்தை கடந்த மூணு வாரமா பதிவுலகையே ஆட்டிப் படிக்குது. இதில நாமளும் ஒரு பதிவு போடலைனா நல்லா இருக்காது. அதுனால இந்தப் பதிவு.

நம்ம நாடு பண்பாடு, கலாசாரத்துக்கும் பழமையான ஒற்றுமைக்கும் பெயர் போன நாடு என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. பல்வேறு இன, மொழி, மத மக்கள் இணைந்து இந்த நாட்டை வழி நடத்துகிறோம். இது உலகத்தில் வேறெங்கும் காண முடியாத அதிசயம்.

நமக்குள் எந்த பிணக்கு வந்தாலும் ஒரு எதிரி நாடு நம் மீது போர் தொடுக்கும்போது நாம் என்றுமே சும்மா இருந்ததில்லை. அதிலும் தமிழர்களாகிய நாம் நம் இனத்திற்குக் கொடுக்கும் மரியாதையை விட நம் தேசத்திற்கு கொடுக்கும் மரியாதை மிகவும் அதிகம். இது அனைவருக்கும் தெரியும்.

எனவே, இந்தியர்களாகிய நாம் மற்றவர்கள் நம் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு ஏதேனும் சொன்னாலும், அதைப் பொருட்படுத்தாது நாம் எல்லாரும் ஒன்றாக வாழ வேண்டியது ரொம்ப அவசியம்.

எனவே, என்னைப் பொறுத்தவரை இந்த லிவிங் டுகெதரை (ஒன்றாக வாழுவது)  நான் ஆதரிக்கிறேன்.

டிஸ்கி : உண்மையைச் சொன்னேன், வேறு ஏதேனும் எதிர்பார்த்து வந்திருந்தால், ஐ யாம் சாரி. போட்டோ போட்டு ஏமாத்தினதுக்கு ஒன் மோர் சாரி. 

Monday, November 22, 2010

என்னுடைய சிறுகதை

என்னுடைய சிறுகதைப் போட்டிக்கு பல கதைகள் வந்திருந்தாலும், என்னுடைய எதிர்பார்ப்புக்கேற்ற ஒரு கதை வரவே இல்லை (ங்கொய்யால, வந்தாலும் இல்லன்னுதான் சொல்லணும்!). சரி, போட்டிக்கு நான் சொன்ன கண்டிஷன்ஸ் ஞாபகம் இருக்கா, உங்கள் நினைவுக்காக அவை கீழே :

** கதை (தலைப்பு உள்பட) தமிழ்ல இருக்கணும்.
** கதையில் (தலைப்பு தவிர) எந்த இடத்திலும் "அ"முதல் "ஔ" வரையிலான உயிரெழுத்துகள் வரக் கூடாது.
** க் முதல் ன் வரை உள்ள  மெய் எழுத்துக்களோ, க முதல் னெள வரையிலான உயிர்மெய் எழுத்துக்களோ  கூட வரக்கூடாது.
** ஆயுத எழுத்தும் வரக்கூடாது

** கதை எல்லாருக்கும் புரியணும் 


சரி, இந்தப் போட்டிக்காக நான் நினைச்சு வச்சிருந்த சிறுகதை பாருங்க.


சிறுகதை (தலைப்பு)








என்ன பாக்குறீங்க? இது சிறுகதையா-ன்னு கேக்கறீங்களா?
ஆமாம், இது சிறுகதைதான். வேணும்னா கீழ பாருங்க, பெரிய "கதை"யை 










நீதி : மாத்தி யோசிங்க, "மாத்து" "மாத்து"ன்னு "மாத்தி" யோசிக்காதீங்க. 

Sunday, November 21, 2010

போட்டிக் கதைகள் - முடிவு

 நான் ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்தபோது அது இந்த அளவுக்கு பதிவர்களை யோசிக்க வைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. (பரிசுகள் என்னவென்று தெரிந்தபிறகும்) அனைவரும் திறம்பட யோசித்து அழகான சிந்திக்க வைக்கும்(?!) கதைகளை பின்னூட்டமாகவும், தங்கள் பதிவுகளிலும் போட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி!
சரி, இந்தக் கதைகளில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுக்கும் பொருட்டு பல பிரபல பதிவர்களை அணுகியபோது அனைவருமே தங்கள் திறமைக்கு இது பெரிய சவால் என்றும், தங்களால் முடியாது என்றும் சொல்லிவிட்டார்கள் ஆகவே, ..........................................................................உங்க எண்ணம் சரி, நானே நீதிபதியா இருந்து சிறந்த கதைகளை தேர்ந்தெடுக்க முடிவு செய்து விட்டேன். (எல்லாம் உங்க நேரம், இப்ப நொந்து என்ன பண்றது, கதை அனுப்பும்போது யோசிச்சிருக்கணும்?)


முதலில் கதைகளை விமரிசனம் செய்வோம். இருக்கறதுலேயே அதுதான் ரொம்ப ஈஸி) கதைகளை பின்னூட்டத்திலேயே படித்திருப்பீர்கள், ஸோ, நேரடியாக விமரிசனம்.

ரமேஷ் (ரொம்ப நல்லவன் சத்தியமா)

//
ଦ,ନଫ, ଦମସଫ୍ ନଵକବକ୍ଷକଵବନସଦ ଦସ୍ଡ଼ ଦ ଫଗସଦଫଗ୍
ಸದ ಸಡ್ ದಸ್ ದ್ಸ್ಫ್ xz ಸಡ್ ಫ್ದಫ್ದ್ಸ ಸಡ್ ದ್ಫ್ಸ್ಫಾಸ್ದ್ಫ್
δσφα δσφ δσφμ σδφξδφσαφ ας
द्स्फ़ दस फ्ड्स फ्द्सफ अस्द्फ़
多少分的是
द्स्फ़ फ्द्स्फ़ सद

//


புரியாத விஷயங்களை புரியாத மொழியில் எழுதினால் எல்லாருக்கும் புரியாது என்ற உன்னத கருத்து இந்த கதையில் இருக்கிறது. இருந்தாலும், கதையின் தலைப்பு என்னவென்றே தெரியாததால் இந்தக் கதை நிராகரிக்கப் படுகிறது. (யோவ் ரமேஷு, அது எப்படி நிராகரிக்கலாம்னு ஏதாவது எழுதினே, வேணாம்.............விட்டுடு..........வலிக்குது!)

அனு

//
ஃஃஃஃஃ ஃஃஃஃஃஃஃ (தலைப்பு)

ஃஃஃஃ ஃஃஃ ஃஃஃஃ ஃஃஃஃஃஃஃஃஃ ஃஃஃஃஃஃஃஃ ஃஃஃஃ ஃஃஃ ஃஃஃஃஃஃஃ ஃ ஃஃஃஃஃஃ ஃஃஃஃஃஃ ஃஃஃஃஃஃஃ ஃ ஃஃஃஃஃஃ ஃஃஃஃஃஃ ஃஃஃஃஃஃ ஃஃ ஃஃஃஃ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ ஃஃஃஃஃஃஃ ஃஃஃஃஃ (கதை)
//

ஆயுத எழுத்து வரக்கூடாது என்ற கண்டிஷன் போடும் முன்னால் வந்த கதை என்பதால், இதை அனுமதிக்கலாம். "ஆயுதம் என்பதே எழுத்தில் மட்டுமே இருக்கவேண்டும் வாழ்க்கையில் இருக்கக் கூடாது, யாரும் ஆயுதத்தைப் பயன்படுத்தாமல், ஆயுத எழுத்தை மட்டும் பயன்படுத்தினால் நல்லது" என்ற சீரிய கருத்தை(?!) வலியுறுத்தும் கதை.

நாகராஜசோழன் (MA )

//-----------------------------!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~+++++++++++++++++++++++========================//


என்ன அருமையான கதை. மைனஸ்களும்(-), ஆச்சரியங்களும்(!) அலைபாயும் எண்ணங்களும்(~)பாசிடிவ் எண்ணங்களும்(+) சமநிலையில்(=) இருக்கும்போது வெற்றி வந்து சேரும் என்ற ஒரு கருத்து உங்கள் கதையில் தெரிகிறது. வாழ்த்துகள்!

அருண் பிரசாத்

//                                                //

//ஹி ஷ ஹா ஷ் ஹ் ஸ்ரீ//

இவரோட ரெண்டு கதைகளும் சூப்பர்! முதல் கதை (அதாங்க ஒண்ணுமே இல்லாத கமெண்ட்) மவுனத்தின் உயர்வைப் பேசுகிறது.
இரண்டாவது கதை (அதாவது "ஹி ஷ ஹா ஷ் ஹ் ஸ்ரீ") ஹி ஹ் மற்றும் ஹா என்பது சிரிப்பையும், ஷ் என்பது மவுனத்தையும் குறிக்கும். ஸ்ரீ என்பது திரு அதாவது செல்வதைக் குறிக்கும். எனவே, நகைச்சுவை உணர்வோடு மவுனமாக இருந்தாலே போதும், செல்வம் வந்து சேரும் என்ற தத்துவத்தை இந்தக் கதை சொல்லாமல் சொல்கிறது.
ஆனால், இந்த இரண்டு கதைகளுக்குமே தலைப்பு இல்லாததால் வேதனையோடு ரிஜெக்ட் செய்கிறேன்.

மதுரை சரவணன் 

//விடிந்த்து...!

ungkal pilaakkil kathai elutha ninaiththu thamilil type seithen ungkal kandisan kettu ellaa eluththum aangkilaththil varukirathu ... ithu eppadi enru yosikkumpothu vidinthathu...//

இவர் தன்னுடைய கதை(?)யை தங்கலீஷில் எழுதியிருக்கிறார். நல்ல கதை.

சே. குமார்

//ஒரு இரவின் ஆரம்பமும் முடிவும் கதையில்..
good night... good morning//

இவர் ஆங்கிலத்தில் கதை எழுதியிருக்கிறார். சாரி, குமார்!

வெங்கட்

//இது " தமிழ் " கதை..!!
----------------------------------

Tamilazhagan-nu enaku oru friend. 
Avanai naanga sellamaa " Tamil " nu koopiduvom.

Tamil sinna vayasula kashtappattu padichchi 
ippa " Infosys " la nalla velaiyila irukkan..
avanukku kalyanam 2006-la aachchi.. 
ippa avanukku oru Daughter irukku
//

இவரும் தங்கலீஷில் எழுதியிருக்கிறார். வாழ்த்துகள். ஆனா, பாருங்க, தமிழ்க் கதை என்பதை தமிழின் கதை என்ற கோணத்தில் எழுதியிருந்தாலும், கதை முற்று பெறாமல் இருப்பது சற்று சோர்வைத் தருகிறது. அது போக, நடுவில் infosys என்று ஆங்கில வார்த்தை வந்துவிட்ட காரணத்தால் சாரி, வெங்கட்! யுவர் ஸ்டோரி ரிஜெக்டெட்.

எஸ்.கே.

//http://www.psychsuresh.50webs.com/psych1/PSV.html//

//(வாழ்க்கை) கணக்கு
----------------------------------------

1-1=0 
1/1=1
1X1=1
1+1=2
//

//தலைப்பு: தத்துவம்!

கதை இதோ!
http://lh4.ggpht.com/_jKnB5UbrDNk/TOT_NildlNI/AAAAAAAABAs/ePL4j5AF2J0/1.jpg

[im]http://lh4.ggpht.com/_jKnB5UbrDNk/TOT_NildlNI/AAAAAAAABAs/ePL4j5AF2J0/1.jpg[im]
//

ஒருவரே ரெண்டு கதைகள் எழுதக் கூடாது என்ற விதி நான் கொடுக்காததால், இவர் மூணு கதைகள் கொடுத்திருக்கிறார். முதல் மற்றும் மூன்றாம் கதைகள் நன்றாக இருந்தாலும், தமிழ் எழுத்துக்கள் வந்துவிட்டதால் வேதனையோடு அவற்றை ரிஜெக்ட் செய்கிறேன். இரண்டாவது கதையான வாழ்க்கைக் கணக்கு உண்மையில் ஒரு பின் நவீனத்துவக் கதை என்று ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். (ஒண்ணும் புரியலை!)

துமிழ்

//
போடா நாயே (தலைப்பு)
...................................................
கதை- போடா நாயே என்று திட்டி விட்டு சாவகாசமாக நடக்கத்தொடங்கினேன்.
நாடு இரவு நிசப்தத்தில் நான் சொன்னது மீண்டும் எதிரொலித்து என்னைத் திட்டியது.
திரும்பிப் பார்த்தேன் என்னிடம் திட்டு வாங்கிய நாய் நாக்கை தொங்கப்போட்டு நக்கலாகப் 
பார்த்தது..
//


இவரும் எஸ்.கே.க்குப் போட்டியாக பின் நவீனத்துவக் கதை எழுதியிருக்கிறார். ஆனா பாருங்க, தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தியதால், வேதனையோடு ரிஜெக்ட் செய்கிறேன்.

சௌந்தர்

//.//

அவனவன் புள்ளி வச்சா கோலமே போடற லெவெல்ல இருக்கும்போது இவரு ஒரே ஒரு புள்ளிய வச்சு அதுதான் கதை என்று சொல்லும்போது நம்ப முடியவில்லை. அது போக, தலைப்பு இல்லை, எனவே, சாரி, சௌந்தர்!

madhavan


இவரோட பதிவுல இருக்கற போட்டோவ மட்டும் பரிசீலனை பண்ணச் சொன்னார். அப்படி பார்த்தால், நல்ல கதையாக இருந்தாலும், தலைப்பு இல்லாததால், அது ரிஜெக்ட் செய்யப் படுகிறது.


LK 

//                           //

அருண் பிரசாத் போலவே இவரும் மவுனத்தின் மேன்மையை அழகாகச் சொல்லியிருக்கிறார். என்றாலும், தலைப்பு இல்லாததால் நிராகரிக்கப்படுகிறது.

R Gopi

//ஏக் காவ் மே ஏக் நரி...
அபி ஏ கஹானி சரி...

தலைவா.... நீங்க கேட்ட கதை ரெடி..

இந்த கதையை எங்க வேணும்னா போடுங்க....

இது பிடிக்கலேன்னா, இந்த டெர்ரர் கதையை படிங்க... இது புரிஞ்சா நீங்க புத்திசாலி... புரியலேன்னா நீங்க அதிர்ஷ்டசாலி...

!@$@$#%$^%%*&*(&()(*()*(&*&*^&%^&#%$#$^&*^(*&)(*))()*)(&*(&*^&#^&()*(((_)()*(&^%&^^#@#$%^&%%^^(&&)&^^*&*
//

இவரு ரெண்டு கதை எழுதியிருக்கிறார். அருமையான ஹிந்தி கதை. ஆனா தமிழ் எழுத்துக்கள் வந்துவிட்டது.அதனால ரிஜெக்டெட். ஆனா, இன்னொரு கதை அற்புதமான பின் நவீனத்துவக் கதை (கதை சுத்தமா புரியலை). வாழ்த்துகள்!

விமரிசனம் முடிஞ்சுடுச்சு. போட்டி முடிவுகளை அறிவிக்க வேண்டியதுதான். ஆனா பாருங்க, நான் அறிவிக்கறதுக்கும் முன்னாடியே என் ப்ளாகில அவங்க பேரோட கதை வந்துடுச்சு. ஸோ, எல்லாருக்கும் முதல் பரிசு (நான் ரிஜெக்ட் செய்த கதைகள் உள்பட).
வெறும் பரிசு அறிவிச்சா போதாது. ஆகையால் உங்கள் ஒவ்வொருவருக்கும் இத்தோடு ஒரு blank cheque.
என்ன பாக்குறீங்க? அமவுண்ட் மட்டும் இல்ல, கையெழுத்து கூட பில்-அப் பண்ணாம கொடுத்திருக்கேன். எவ்ளோ அமவுண்ட் வேணுமோ, அதை எழுதி கையெழுத்தும் நீங்களே போட்டுட்டு Bank of "CHEAT"oor போய் பணத்தை வாங்கிக்குங்க.
கங்ராஜுலேஷன்ஸ்!
பை தி வே, என்னோட இரண்டு சிறுகதைகள் (நான் கொடுத்த விதிகளின்படி) அடுத்த பதிவில்!


டிஸ்கி : ஒரு கவிதை போட்டி வைக்கலாமான்னு.............................................ஓகே, ஓகே, நோ பேட் வேர்ட்ஸ் ப்ளீஸ்!

Wednesday, November 17, 2010

சிறுகதைப் போட்டி

நாம எழுதிக் கிழிச்சது போதும் என்று நான் நினைத்தால் நம்ம பதிவர்களுக்கென்று ஒரு சிறுகதைப் போட்டியை அறிவிக்கிறேன்.

யார் வேண்டுமானாலும் கதை எழுதலாம். தங்கள் ப்ளாகில் போட்டுவிட்டு இங்கு லிங்க் கொடுக்கலாம்.

முதல் பரிசு : அவங்க பேரப் போட்டு அந்தக் கதையை என் ப்ளாகில் பிரசுரிப்பேன்.
இரண்டாம் பரிசு : என் பேரப் போட்டு அந்தக் கதையை என் ப்ளாகில் பிரசுரிப்பேன்.
மூன்றாம் பரிசு : என் பேரப் போட்டு அந்தக் கதையை என் ப்ளாகில் பிரசுரித்துவிட்டு அவர்கள் மேல் கேஸ் போடுவேன்.

கண்டிஷன் சொல்லவே இல்லையே?

கண்டிஷன் ஒண்ணு : கதை (தலைப்பு உள்பட) தமிழ்ல இருக்கணும்.
கண்டிஷன் ரெண்டு : கதையில் (தலைப்பு தவிர) எந்த இடத்திலும் "அ"முதல் "ஔ" வரையிலான உயிரெழுத்துகள் வரக் கூடாது.
கண்டிஷன் மூணு : க் முதல் ன் வரை உள்ள  மெய் எழுத்துக்களோ, க முதல் னெள வரையிலான உயிர்மெய் எழுத்துக்களோ  கூட வரக்கூடாது.
கண்டிஷன் நாலு : ஆயுத எழுத்தும் வரக்கூடாது (அனு கவனிக்க!)
கண்டிஷன் அஞ்சு : கதை எல்லாருக்கும் புரியணும் (ரமேஷும், நாகராஜனும் கவனிக்க!)
கண்டிஷன் ஆறு : இனிமே வர பின்னூட்டங்கள வச்சு மேலும் கண்டிஷன் வரும்

டிஸ்கி : வெள்ளி இரவுக்குள் கதைகள் வந்து சேராவிட்டால், சனி அன்று என் கதை போடப் படும்.

Sunday, November 14, 2010

ஹாப்பி சில்ட்ரன்ஸ் டே!

எல்லாருக்கும் வணக்கம். காலையில கொஞ்சம் பிசி. அதான் இப்போ வர்றேன். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உங்கள் அபிமான பெசொவி அவர்கள் வெளியிடும் சிறப்புக் கவிதைகள்(?!) கீழே. ஸ்டார்ட் மீசிக்.

 "குழந்தைகள் தின"மாம்
குளிக்க வைத்தார்கள்
துணி கொடுத்தார்கள்
உணவு போட்டார்கள்
ஊர்வலம் நடத்தினார்கள்
இன்னொரு
"சுதந்திர தினம்"
இனிதே கடந்தது.
இனி
அடுத்த வருட "தினத்துக்கு"
"அனாதைகள்" வெயிட்டிங்!

************

ஏணியில் ஏறி
பெரிய போஸ்டரை
சுவரில் ஒட்டினான்
அந்த சிறுவன்
போஸ்டரில் வாசகம்
"குழந்தைத் தொழிலாளரை ஒழிப்போம்"

*************

"இன்னிக்காவது
மம்மி, டாடியை
பாப்பேனா"
புலம்பிய சிறுவனிடம்
ஆயா சொன்னாள்,
"குழந்தைகள் தினமாச்சே,
அதான் அவங்க ஒரு
அநாதை இல்ல விழாவுக்கு
போயிருக்காங்க!"


**************

வானம்பாடிகள் ஐயாவின் சந்தோஷத்துக்காக  ஒரு கவிதை(?!)

துன்பம் நீக்கும்
துயரம் போக்கும்
இன்பம் சேர்க்கும் 
இனிமை கூட்டும்
இனிய கவிதை 
அதன் பெயர் 
மழலை

Saturday, November 13, 2010

சிரிப்பு போலீஸும் சிக்கிய நானும்

எப்பவும் போலதான் அன்னிக்கும் எல்லார்கிட்டயும் பேசிகிட்டிருந்தேன். ஆனா பாருங்க, என் போன ஜன்மத்து சாபமோ என்னவோ, சிரிப்பு போலீஸ்கிட்ட பேசும்போது மட்டும் நம்ம ஊருக்கு வாங்கன்னு சொல்லிட்டேன். ஊரு பேரு தூத்துக்குடின்னும் சொல்லிட்டேன்.  யாராவது கூப்பிட மாட்டாங்களான்னு ஏங்கிக்கிட்டு இருந்தாரோ   என்னவோ, "ஆஹா, உடனே வர்றேன்"னு சொல்லிட்டாரு. "சரி கொஞ்சம் முன்னாடியே சொல்லிட்டு வாங்க"ன்னு வேற சொல்லியிருந்தேன். (முன்னாடியே தெரிஞ்சா "எஸ்" ஆகிடலாம்னுதான்,ஹிஹி!)

ஆனா  பாருங்க, சிங்கம் சிங்கிளா வரும், ஆனா, துன்பம்  சிங்கிளா வராது போலிருக்கு. அதான், கூடவே நம்ம இம்சையையும் கூட்டிகிட்டு வரேன்னாரு.  சரி வாங்கன்னுட்டேன். நமக்குத் தெரிந்த ஒருத்தர் துறைமுகத்துல வொர்க் பண்றாரு. அதுனால, பாஸ் வாங்கிகிட்டு உள்ள போனோம். ஒரு கப்பலைக் காமிச்சு, இதுதான் சரக்கு கப்பல்னு சொன்னேன். உடனே, "அந்தக் கப்பல் முழுக்க சரக்கு இருக்குமா?"ன்னு ஜொள்ளு விட்டுகிட்டே கேட்டாரு பாருங்க................என்னது, யாரு கேட்டாங்களா? சொல்லிடவா..........சொல்லட்டுமா..........வேணாம், விட்டுடுங்க, சொன்னா நம்ம போலிஸ் வருத்தப் படுவார். யோவ், அது இல்லையா, சரக்குன்னா   இறக்குமதியாகற பொருட்கள் அப்படின்னு விளக்கினேன்.

 
சிரிப்பு போலிஸ், இம்சை & பெசொவி.

ஒரு கப்பல் உள்ளார போய்ப் பாக்கனும்னு வேற கெஞ்சினாரு. சரின்னு  மரத்துண்டு  (WOODEN LOGS ) வர கப்பல் மேல போனோம். அங்க, போலீசப்  பாத்ததுமே அந்தக் கப்பல் கேப்டன் மிரண்டு போயிட்டாரு. யாரை வேணும்னாலும் உள்ள விடுவேன், இந்த ஆள மட்டும் விடவே மாட்டேன்னு முரண்டு பண்ணினாரு. அப்புறம் நம்ம பவர யூஸ் பண்ணி மேல கூட்டிகிட்டு போனேன். 


இம்சை(வலது ஓரம்) -  இரண்டு புத்தர்களுடன் (ஹிஹி!)

கப்பல் மேல் தளத்துல இருந்துதான் கப்பல  இயக்குவாங்க.  A/C செய்யப்பட்ட அந்த ரூமை காட்டி  "இந்த இடத்துக்குப் பேருதான் பிரிட்ஜ் (bridge)"ன்னேன். "ஓஹோ, ப்ரிஜ்ஜா, அதுதான் ஜில்லுனு இருக்கு" அப்படின்னாரு போலீஸ். bridge-க்கும் fridge-க்கும்  வித்தியாசம் தெரியாத போலிச அப்பத்தான் பாத்தேன்.
தான் வாங்கிய கப்பலின் மேல்தளத்தில் இம்சை அரசன்
(அப்படின்னு எழுதத் தான் ஆசை, ஆனா ஒரிஜினல் ஒனர் உதைக்க வருவாரே!) 
ஒரு வழியா ரெண்டு மூணு போட்டோ எடுத்ததுக்கு அப்புறம் கீழ வந்தோம். இம்சை என்னப் பார்த்து "இதுக்கு ஏன் சரக்குக் கப்பல்னு பேர் வச்சாங்கன்னு எனக்குப் புரிஞ்சுடுச்சு. எப்பவுமே தண்ணில இருக்கு, ரொம்ப தள்ளாடுது, அதுனாலத்தானே?" அப்படின்னாரு.

மொத்ததுல நான் முழிச்ச முகமே சரியில்லை. (முதல்ல பெட்-ரூம்ல இருக்கற முகம் பாக்கற கண்ணாடிய மாத்தணும்-ஹிஹி).


Monday, November 8, 2010

நல்லா இருப்பியா நீயி?

பாவி மனுசி, நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தா, உனக்கு பொறுக்கலையா?

அப்படி என்ன கொடுமை உனக்கு செஞ்சேன்? எத்தனையோ தடவை எங்களை மாதிரி யாரோ ரெண்டு பேர் உனக்கு செஞ்சிருக்கற நன்மைகளை நினைச்சிருந்தா, நீ இப்படி பண்ணியிருப்பியா?

எங்க ரெண்டு பேரையும் பாக்கற எல்லாருமே "ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்கு"ன்னு வாய் விட்டு புகழறாங்க. அது உனக்கு காதுல நாராசமா இருக்கா, பாவி?

ஐயோ, என் கண் எதிர்க்க என்னவரை என்கிட்டேயிருந்து பிரிச்சுட்டியே, நான் இல்லாம அவர்  இல்ல, அவர் இல்லாம நான் இல்ல, இது கூட புரிஞ்சுக்க முடியாத நீ சரியான தண்டம். இங்க பாரு, மரியாதையா எங்க ரெண்டு பேரையும் சேர்த்து விட்டுடு, இல்ல, எங்க ரெண்டு பேருக்கும் வாழ்க்கையே இல்ல.

அடப் பாவிகளா, நான் சொல்றது அவ காதுலதான் விழலை, உங்க காதுகளுமா செவிடாயிடுச்சு? சேர்த்து விடுங்களேண்டி, ப்ளீஸ்............!

டிஸ்கி : ஏங்க, தன்னோட ஜோடிய பிரிஞ்சு இவ வாடுறது உங்களுக்காவது புரியுதா? 
கொஞ்சம் கீழே பாருங்க...................








அதோட ஜோடி இங்க இருக்கு.



Saturday, November 6, 2010

நானும் இந்த வருஷ தீபாவளியும்

 என்னோட போன பதிவுல சொல்லியிருந்த மாதிரி டிவி, நெட் பக்கம் போகாம இந்த தீபாவளிய கொண்டாடனும்னு தான் முடிவு பண்ணியிருந்தேன். ஆனா பாருங்க, இந்த சன் டிவியில பட்டிமன்றம் தலைப்பு "இன்றைய தலைமுறை பெற்றது அதிகமா, இழந்தது அதிகமா?"ன்னு இருந்ததால ஒரு சுவாரசியத்துக்காக அந்த நிகழ்ச்சி மட்டும் பார்த்தேன். தீர்ப்பு மட்டும் பாக்கலை, கேபிள் ப்ராப்ளம்.

நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன், என் பத்து வயது பெண்ணிடம் கேட்டேன், "நீ சொல்லு எங்களோட கம்பேர் பண்ணும்போது உங்களுக்கெல்லாம் கிடைச்சது அதிகமா, அல்லது நீங்க இழந்தது அதிகமா?" அதுக்கு அவ சொன்னா, "என்னப்பா இது அர்த்தமற்ற கேள்வி? நீயே சொல்லியிருக்க, உனக்கு வருஷத்துக்கு ஒரு தடவைதான் டிரஸ், ரெண்டு மத்தாப்பு டப்பாவும் கலர் தீப்பெட்டியும் தான் பட்டாசு. ஆனா எனக்கு அப்படியா? அதுனால எங்களுக்கு கிடைச்சதுதான் அதிகம்." என்றால் அவள்.

எதிர்பார்த்த மாதிரியே, வசதிகள் பல கிடைத்துள்ளன என்று ஒரு சாராரும் "அதெல்லாம் சரி, ஆனால் ஒழுக்க குணங்கள் இழந்துள்ளார்களே"என்று மறு சாராரும் வாதம் செய்தார்கள். நடுவர் தீர்ப்பு என்னவென்று தெரிந்தவர்கள் பின்னூட்டமிடலாம்.

எல்லோரும் சேர்ந்து சாப்பிட்ட பிறகு(ரொம்ப நாள் கழித்து உறவுகள் கூடி மகிழ்ந்த தருணம் அது), குழந்தைகளோடு விளையாடலாம் என்று நினைத்தால் அவர்கள் உறவுக்கார சிறுவர்களோடு விளையாடுவதையே விரும்பினார்கள். நெட் பக்கமும் போக விரும்பவில்லை. எனவே, எனக்கு மிகவும் பிடித்த வேலை செய்தேன். (நீங்க நினைச்சது சரி......................தூங்கினேன்).

ஒரு மூன்று மணி போல் எழுந்தேன். "பிள்ளைங்களா, விளையாடலாமா?" என்று என் குழந்தைகளையும் அண்ணன் பசங்களையும் அழைத்தேன். எல்லோரும் ஒரே குரலாக, "அய்யய்யோ, டிவியில விஜய் படம் இருக்கு, நாங்க அங்க போறோம்" என்றார்கள். (விஜய் படம் பார்ப்பதை விட என்னோடு விளையாடுவது அவ்வளவு கொடுமையோ, என்னவோ?) "அதெல்லாம் முடியாது, இன்னிக்கு டிவியோ நெட்டோ கிடையாது. எப்ப பார்த்தாலும் சினிமா தானா? நத்திங் டூயிங்" என்றேன். என் மகள் என்னிடம் "இப்போ புரியுது, உங்களை விட, நாங்க இழந்தது அதிகம்தான். ஒரு டிவி பாக்க முடியலை, என்ன வசதியோ?" என்றாள். அவளிடம் நான் எதுவும் பேசவில்லை. இன்னும் முப்பது வருடங்கள் கழித்து, அவள் பையன் அவளிடம் இதே வார்த்தைகளைப் பேசும்போது, அவளும் இது போன்ற ஒரு பதிவை எழுதுவாள், அப்போது புரியும் அல்லவா?

Thursday, November 4, 2010

தீபாவளியும் நானும்

முன் டிஸ்கி : சொந்தக் கதை என்பதால் கொஞ்சம் பெரிய பதிவு. சாரி.
நாம் கொண்டாடும் எல்லா பண்டிகைகளுமே நமக்கு முக்கியம்தான் என்றாலும், சிறுவர்களுக்கு கொண்டாட்டம் தரும் பெரிய பண்டிகை தீபாவளி பண்டிகைதான். எங்கள் குடும்பம் கொஞ்சம் நடுத்தரத்திற்கும் கீழ் இருந்ததால், எங்களுக்கெல்லாம் தீபாவளி வந்தால்தான் புதுத் துணி. எனவே, அது எனக்கு ஒரு ஸ்பெஷல் கொண்டாட்டம். என் பெரிய அண்ணன் தான் எங்கள் தீபாவளி தெய்வம். எங்களுக்கு புதுத் துணி எடுப்பது முதல், வெடி வாங்குவது வரை அவர்தான். "எங்க வீட்டில இந்த வருஷம் நூறு ரூபாய்க்கு வெடி வாங்கறோமே, நாங்க இருநூறு ரூபாய்க்கு வெடி வாங்கறோமே" என்று என்னிடம் சொல்லிப் பெருமைப்படும் தெரு பையன்களிடம், "எங்க அண்ணன் எவ்ளோ ரூபாய்க்கு வாங்கறார்னு தெரியலை" என்று ரொம்ப கூச்சத்துடன் சொல்லி,  அவர்கள் ஏளனப் பார்வை தாங்காது,...............அப்பா, சொல்லி மாளாது.
தீபாவளி முதல் நாள் வரை எனக்கு என்ன கலர் சட்டை என்பதே தெரியாது. ஏனென்றால், என் அண்ணன் வெளியூரில் வேளை பார்த்தால், தீபாவளிக்கு முதல் நாள் தான் வீட்டிற்கே வருவார். அதற்காக மாலை முதலே வீட்டு வாசலில் நானும் என் தம்பியும் தவம் இருக்க ஆரம்பித்து விடுவோம்.  அவரிடம் கொஞ்சம் பயமும் இருந்ததால், அவராக பையை எடுத்து துணியை வைக்கும் வரை நாங்கள் எதுவும் தொட மாட்டோம். பிறகு பட்டாசு பையை எடுப்பார். வெடி என்றாலே பயம் எனக்கு, எனவே புஸ்வானம், மத்தாப்பு இதில்தான் கவனம் செலுத்துவேன். இரவு முழுவதும் தூங்கவே மாட்டோம். பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க, நானும் என் தம்பியும் தொகுதிப் பங்கீடு நடத்தி யார் யாருக்கு எத்தனை மத்தாப்பு என்று முடிவு செய்து கொண்டிருப்போம்.
அடுத்த நாள் அதிகாலை, பெரிய அண்ணன் சுவாமி சந்நிதியில் ஒரு கலர் தீப்பெட்டி கொளுத்தி தீபாவளியை ஆரம்பித்து வைப்பார்.  (அது இன்று வரை தொடர்கிறது- காரணம் கேட்டபோது அண்ணன் சொன்னார் "என் சின்ன வயசில் இந்த தீப்பெட்டி மட்டும் தான்  தீபாவளி, அதை மறக்காம இருக்கத்தான்") அம்மா வெந்நீர் அடுப்பு பற்றவைக்க, ஒவ்வொருவராக எண்ணெய் தேய்த்துக் குளிப்போம். எங்கள் turn வர கொஞ்சம் நேரமாகும் என்பதால் அது வரை வெடி பாக்கெட்டையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்போம். எல்லாரும் குளித்து முடித்தவுடன் ஆளுக்கு ஒரு தீப்பெட்டி பாக்கெட், ரெண்டு கம்பி மத்தாப்பு ரெண்டு புஸ்வானம் கொடுப்பார். அவ்வளவுதான், எங்கள் தீபாவளி ஓவர்.

இன்று என் பிள்ளைகளுக்கு மாதம் ஒரு துணி எடுத்துக் கொடுக்கிறேன். பட்டாசு விலையைப் பற்றி சொல்ல வேண்டாம். ஆனால், சிறு வயதில் நான் கொண்டாடிய தீபாவளியின் இன்பம் இந்த நாளில் இருப்பதில்லை. குடும்பத்தில் எல்லோரும் வெளியூரில் இருந்தாலும், அந்த நன்னாளில் சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தாருடன் ஒன்றாக கலந்து பேசி, ஒன்றாக சாப்பிட்டு........................இதெல்லாம் இன்று இல்லை. காலை குளித்து முடித்தவுடன் டிவி முன்னால் உட்கார்ந்து, டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டு, டிவியோடு தான் தீபாவளி என்று ஆகிவிட்டது.

நாம் கொண்டாடும் பண்டிகைகளின் கால அளவைப் பாருங்கள். ஜனவரியில் பொங்கல், ஏப்ரலில் தமிழ்ப் புத்தாண்டு,  செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நவராத்திரி, நவம்பர் மாதத்தில் தீபாவளி என்று குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து மகிழ்வதற்காகவே இந்த கால வித்தியாசம். அப்படி இருக்க, வருடத்தில் மூன்று தடவையாவது ஒரு நாள் முழுவதும் டிவியில் காலம் தள்ளாமல் ஒன்றாக இருந்து, குடும்பத்தோடு பண்டிகையைக் கொண்டாடலாமே!

உங்கள் எல்லோருக்கும் என் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள்! வாங்க என்னோட சேர்ந்து இந்த வான வேடிக்கையைப் பாருங்க!