அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, February 28, 2011

வாரச் சந்தை - 28.02.2011


ஒரு தத்துவம் 

தற்கொலை பண்ணிக்கறது சரிதான், ஏன்னா, கோழைகளுக்கு இந்த பூமியில் இடம் கிடையாது!

ஒரு பொன்மொழி

ஒரு முறை போனால் திரும்ப வராதது நான்கு:
உயிர், அம்பு, சொல்லிய வார்த்தை, வாய்ப்பு.

ஒரு ஜோக்

ஒருவருக்கு போன் வந்தது,"சார், உங்க மனைவி ஒரு குளத்தில விழுந்துட்டாங்க, அந்த குளத்தில ஒரு முதலை இருக்கு!"

"அதுக்கு ஏன் எனக்கு போன் பண்றீங்க, முதல்ல அந்த முதலையைக் காப்பாத்தற வழியப் பாருங்க!" 

ஒரு கவிதை

"அன்பே, ஆருயிரே"
வார்த்தைகள் இருக்க, 
"அண்ணே"தான் கிடைத்ததா?
இனிய உளவாக
இன்னாத கூறல் ஏன், கண்ணே?

ஒரு குவிஸ் 

சமூக விரோதிக்கும் ஒரு அரசியல்வாதிக்கும் என்ன வித்தியாசம்?

சமூக விரோதி "wanted" லிஸ்ட்ல இருப்பாரு!  அரசியல்வாதி "Unwanted" லிஸ்ட்ல இருப்பாரு.

Wednesday, February 23, 2011

பேசுவது எப்படி? - 4


முன் டிஸ்கி : ரொம்ப நாள் கழிச்சு ஒரு சீரியஸ் போஸ்ட்......ஹிஹி!

இந்த பதிவில் மனைவியுடன் பேசுவது எப்படி என்று குறித்து என் சிறிய பார்வை.

"ச்சே, என்ன இழவு இது? சாம்பார்ன்ற பேருல ஏதோ பண்ணி வச்சிருக்கே" என்று மனைவியைத் திட்டத் தெரிந்த நீங்கள் என்றாவது அடுக்களையில் அவர்களுக்கு உதவி செய்த அனுபவம் உண்டா? உங்கள் மீது அன்பு இருக்கும் காரணத்தால் எத்தனையோ தியாகங்களைச் செய்து உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் தன்னையே உருக்கிக் கொள்கிற அந்த ஜீவனுக்கு நீங்கள் உங்கள் தோலையே செருப்பாகத் தைத்துப் போட்டாலும் ஈடாகாது.

யோசித்துப் பாருங்கள், யாரோ ஒருவர், உங்கள் நல்லது கெட்டது எதிலும் நாட்டமில்லாதவர் ஆனால் உங்கள் மேனேஜர் என்ற ஒரே காரணத்திற்காக அவர் திட்டும் எல்லா வார்த்தைகளையும் ஜீரணிக்கிற உங்களால் உங்களுக்காக மட்டுமே வாழ்கிற, உங்கள் சுக, துக்கங்களில் பங்கு கொள்கிற உங்கள் மனைவியின் ஒரு சிறிய கோப வார்த்தையைக் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் போகிறதே, அது ஏன்?

நானும் என் மனைவியிடம் சண்டை போட்டவன்தான், போடுபவன்தான். ஆனால் சமீப காலங்களில் எங்களுக்குள் சண்டையே வந்ததில்லை. காரணம்?- நீங்கள் யூகித்து சரிதான், நான் பல சமயங்களில் விட்டுக் கொடுக்கப் பழகிக் கொண்டேன்.

உங்கள் மனைவியிடம் எப்போதாவது "அழகாக இருக்கிறாய்" என்று சொல்லியிருக்கிறீர்களா? சொல்லிப் பாருங்கள், "நீ வைத்த குழம்பும், ரசமும் என் வாழ்வில் சாப்பிட்டதில்லை" என்று மட்டும் சொல்லிவிட்டால் போதும், உங்கள் சொல்லுக்கு என்றும் அவர் அடிமைதான். "அது எப்படி மனசார பொய் சொல்வது" என்று (காமெடிக்காகவாவது)கேட்கிறீர்களா? அதே மேனேஜர் உதாரணம்தான். "யு ஆர் கிரேட் சார்","வாட் எ பன்டாஸ்டிக் திங் யு ஹாவ் டன் சார்", என்றெல்லாம் மேனேஜரைப் புகழும் உங்களுக்கு இது ஒரு கஷ்டமான காரியமா?

அதே போல்தான், தினசரி குடும்ப நடவடிக்கைகளில் உங்கள் மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்தாலே போதும், உங்கள் மீது மதிப்பு பல மடங்கு ஏறிவிடும். நீங்கள் ப்ரீயாக இருந்தால், குழந்தைக்குப் பல் துலக்கி, குளித்துவிட்டு, யூனிபார்ம் மாட்டிவிட்டு (இதில் ஏதாவது ஒன்றைச் செய்தால் கூடப் போதும்) பிறகு பாருங்கள், உங்கள் இல்லற வாழ்க்கை இனிய வாழ்க்கைதான்.

கணவன் மனைவி சண்டைகளைப் பற்றிய ஜோக்குகளைக் கொஞ்சம் மூட்டை கட்டி வைத்துவிட்டு பார்த்தால், பெரும்பாலான கணவன் -மனைவிகள் சந்தோஷமாகவே இருக்கிறார்கள். ஒரு ஆணுக்கு கல்யாணத்திற்குப் பிறகுதான் குடும்பப் பொறுப்புகள் பற்றி ஒரு தெளிவு வருகிறது என்பது நிதரிசனம்.

நான் ஏற்கெனவே கூறியதுதான், இருந்தாலும் திரும்பவும் சொல்கிறேன், "நீங்கள் பிறரிடம் எதை எதிர்பார்க்கிறீர்களோ, அதை அவருக்கே கொடுங்கள், உங்கள் வாழ்க்கை இனிமையாகும்" மனைவியிடம் அன்பை எதிர்பார்க்கும் நீங்கள் அவருக்கு அன்பைக் கொடுங்கள், அந்த அன்பு என்றும் வீணாகாது!

WIFE IS THE SECOND MOTHER FOR A MAN WHILE A MAN IS THE FIRST SON OF HIS WIFE!

Monday, February 21, 2011

வாரச் சந்தை - 21.02.11

ஒரு தத்துவம்

காலையில பேஸ்டுக்கப்புறம்தான் காப்பி ஆனா, கம்பியூட்டர்ல மட்டும் காப்பிக்கு(copy) அப்புறம் தான் பேஸ்ட். 

ஒரு பொன்மொழி

(இது இங்கிலிஷ்ல இருந்தாதான் சுவையா இருக்கும்)
Success has many parents while failure is an orphan.

ஒரு ஜோக்

லைப்ரரியில் மிஸ்டர் எக்ஸ்: என்னய்யா புக் இது, நிறைய காரெக்டர் பேர் இருக்கு, ஆனா ஒரு சம்பவமும் வரவே இல்ல?

லைப்ரரியன்: அடப் பாவி இங்க இருந்த டெலிபோன் டைரக்டரிய எடுத்துட்டுப் போனது நீதானா? 

ஒரு கவிதை

அன்று 
பொய் சொன்னேன், 
பிறரை அடித்து நொறுக்கினேன்
காசு களவாண்டேன்
சீர்திருத்தப் பள்ளி சென்றேன்!

இன்று 
பொய் சொல்லி
பிறரை அடித்து நொறுக்கி
காசும் களவாண்டு  
களிப்போடு இருக்கிறேன்,
"அண்ணன் வாழ்க" கோஷங்களோடு!

ஒரு குவிஸ் 

நான் புகை பிடிக்கும் பழக்கத்தை விடப் போவதில்லை, ஏன்?

எனக்கு புகை பிடிக்கும் பழக்கமே கிடையாது, இருந்தாதானே விட முடியும்? 

Sunday, February 20, 2011

பாழாய்ப் போன கிரிக்கெட் மோகம்

தெரியாமதான் கேக்கறேன், கிரிக்கெட் இல்லன்னா உலகமே அஸ்தமிச்சுப் போயிடுமா? அதுதான் போகட்டும், இந்தியா விளையாடுதுன்னு சொல்றீங்களே, அது பிசிசிஐ அணி, அவ்ளோதான். விளையாட்டை விளையாட்டாப் பாக்காம, அதை தேசப் பற்றோட இணைச்சுப் பாக்கறது உங்களுக்கே ஓவரா தெரியல?

இந்த டிவிக்காரங்க வேற, என்னவோ மூணாம் உலகப் போரே வந்துட்டா மாதிரியும் இந்தியாவையே இவனுங்கதான் காப்பாத்தப போறா மாதிரியும் இவங்க ஆட்டம் தாங்க முடியல! ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், இஸ்ரோ ஊழல்கள் எல்லாம் காத்தோட போயிடுச்சு, போல! 

டென்த், பிளஸ் டூ படிக்கிற பசங்களா, ஒண்ணு சொல்றேன், கிரிக்கெட் மட்டுமில்ல எந்த விளையாட்டும் சரி, எப்ப வேணா பாக்கலாம், ஆனா படிப்பு இப்ப விட்டுட்டா அப்புறம் பிடிக்கறது ரொம்ப கஷ்டம். உங்க எதிர்காலத்தை நிர்ணயிக்கிற காலம் இது, ஞாபகம் வச்சுக்கிட்டு படிப்புல மட்டுமே கவனம் செலுத்துங்க.

பெற்றோருக்கு, உங்கள் பிள்ளைகள் நல்லா படிக்கனும்னா, கொஞ்ச நாளைக்கு டிவியை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு அவங்க படிப்புக்கு உதவுங்க, பாழாப் போன கிரிக்கெட் எப்பவுமே இருக்கும்!

இளைஞர்களே, திரும்பவும் சொல்றேன், கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி என்பது பல நாட்டில் உள்ள கிரிக்கெட் அணிகள் விளையாடும் ஒரு போட்டி அவ்வளவுதான், இதற்கும் அந்தந்த நாட்டிற்கும் சம்பந்தமே இல்லை. சரியா சொல்லனும்னா ஒரு நாட்டைச் சேர்ந்த வீரர் இன்னொரு நாட்டு அணியில் விளையாடுவது கூட சகஜம். இதற்கும் தேச பக்திக்கும் தொடர்பே இல்லை. போங்க, பொழைப்பைப் பாருங்க!
  

Saturday, February 19, 2011

இது எப்படி இருக்கு?



ராமசாமியும் கிருஷ்ணசாமியும் நண்பர்கள். சிறு வயது முதலே இருவரும் கிரிகெட் விளையாடுவார்கள். இப்போது இருவருக்கும் எண்பது வயது.
ராமசாமி படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று தெரிந்து அவரைப் பார்க்க வந்தார் கிருஷ்ணசாமி. நண்பரை சமாதானப் படுத்த எண்ணிய கிருஷ்ணசாமி, "கவலைப்படாதே ராமசாமி, உலகக் கோப்பை முடியறவரைக்கும் நீ சாக மாட்டே"என்றார்.

கிருஷ்ணசாமி சமாதானமாக வில்லை. "எனக்கு சாகறதை பத்தி கூட கவலை இல்லைடா, என்னைப் பிரிஞ்சு நீ எப்படி வாழப் போறியோன்னுதான் கவலை" என்றார்.

ராமசாமி, "உண்மைதான்டா, சரி நீ ஒன்னு மட்டும் செய், ஒரு வேளை இறந்து போயிட்டா மேல் உலகத்தில கிரிக்கெட் விளையாட முடியுமான்னு என் கனவில வந்து சொல்றியா?" என்று கேட்டார். "அதுக்கென்னடா, நிச்சயம் சொல்றேன்"னு சொல்லிட்டு கொஞ்ச நாளில் இறந்துவிட்டார்.

ஒரு நாள் இரவு, ராமசாமி தூங்கும்போது கனவில் கிருஷ்ணசாமி வந்தார். நண்பனைப்பார்த்து ஆனந்தமாகக் கேட்டார், "அந்த உலகத்தில ஏதாவது விசேஷம் உண்டா?"

"உண்டு, ஒரு நல்ல செய்தி, கெட்ட செய்தி ரெண்டு இருக்கு, எதை முதல்ல சொல்லட்டும்?" என்று கேட்டார் கிருஷ்ணசாமி.

"நல்ல செய்தி முதல்ல" - இது ராமசாமி.

"மேல் உலகத்தில கூட கிரிக்கெட் விளையாடறாங்க. இப்ப கூட அங்கேயும் வேர்ல்ட் கப் மேட்ச் நடக்குது" என்றார் கிருஷ்ணசாமி.

"சரி, கெட்ட செய்தி?" ஆர்வமாக கேட்டார் ராமசாமி.

சோகமாக சொன்னார், கிருஷ்ணசாமி, "நாளைய மேட்சுல, நீயும் ஆடறே!"

டிஸ்கி : எல்லாரும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் பத்தி எழுதும்போது, நானும் எழுத வேண்டாமா?    

Thursday, February 17, 2011

நான் நடித்த திரைப்படங்கள்

மாதவனின் இந்தப் பதிவைப் படிச்சப்புறம் எனக்கு ஒரே கவலை. ஊருக்கே தெரிந்த நடிகர் இம்ரான் கானை தெரியாதுன்னு சொல்லிட்டாரே, இப்படியே போனா, நான் சிறந்த நடிகர்னு கூட தெரியாம போயிடும். அதுனாலதான் நான் இந்தப் பதிவை எழுதறேன்.

என்ன அப்படி பார்க்கறீங்க, நான் நிறைய படத்துல நடிச்சிருக்கேன், சார்/மேடம்!
குறிப்பா சொல்லனும்னா பாலசந்தரோட படம், எதிர் நீச்சல் பார்த்திருக்கீங்களா? என்ன ஒரு படம், அது. நாகேஷ், மேஜர், முத்துராமன், மனோரமா இன்னும் பல சிறந்த நடிகர் நடிகைகள் நடிச்ச படமாச்சே,   அதைப் பாக்காம இருந்திருப்பீங்களா?

அந்தப் படத்துலதான் நான் ஒரு முக்கியமான கதாபாத்திரமா நடிச்சிருக்கேன். சொல்லப் போனா, அந்தப் படத்திலேயே நான் சம்பந்தப் பட்ட சீன்லேதான் ஒரு திடீர் திருப்பமே இருக்கு. 

உண்மைதாங்க, ஒரு சீன்ல வீட்டில இருக்கற எல்லோருமே நாகேஷை திட்டி வெளிய போகச் சொல்லிடுவாங்க, அப்ப நான் ஒரு குரல் கொடுப்பேன் பாருங்க, உடனேயே, மாதுவை (அதான், நாகேஷை) வெளிய போக வேண்டாம்னு சொல்லிடுவாங்க. அப்ப என் கேரக்டர் முக்கியமானதா இல்லையா?

ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கிறேனோ, ஓகே, சொல்லிடறேன், எதிர் நீச்சல் படத்துல வர்ற "இருமல் தாத்தா" காரெக்டர் நான் பண்ணினதுதான். 
ஹி., ஹி., ஹி.. 
நான் தான் "பெயர் சொல்ல ( திரையில் முகம் காட்ட ) விருப்பமில்லாத " ஆளாச்சே!

Monday, February 14, 2011

வாரச் சந்தை - 14-02-2011

முன் டிஸ்கி : காதலர் தினம் என்ற பெயரில் காசைக் கரியாக்கப் போகும் காதலர்களுக்கு இனிய வாழ்த்துகள்! 


ஒரு தத்துவம் 

பணம் மட்டுமே எல்லாம் ஆகாது...................................அதற்கு மேல், மாஸ்டர் கார்ட், விசா கார்ட் இருக்கு!


ஒரு கவிதை

யார் சொன்னது
நான் கவிஞன் இல்லை
என்று
கவிதை எழுதுபவன்
கவிஞன் என்றால்
நான் கவிஞன்தான்,
உன் பெயரை
எழுதுவதால்!


ஒரு ஜோக்


அவன் சொன்னான், "ஐ லவ் யூ,ஐ லவ் யூ,ஐ லவ் யூ!"
அவள் கேட்டாள்,"எப்பங்க கல்யாணம்?"
அவன் சொன்னான், "நோ, சப்ஜெக்ட மாத்தாதே!"

ஒரு குவிஸ்


காதலிக்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம்?


காதலி ப்ரீ-பெய்ட் மாதிரி, முன்னாடியே செலவு செஞ்சாதான் கனெக்ஷன் கிடைக்கும்.
மனைவி போஸ்ட்-பெய்ட் மாதிரி, முதல்லயே கனெக்ஷன் கிடைச்சுடும், ஆனா, ரெகுலரா செலவு செய்யணும்.


ஒரு பொன்மொழி 


உங்களை பிறர் எப்படி நடத்த வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்கள் பிறரை நடத்தினால், மகிழ்ச்சியாய் வாழலாம்.

Monday, February 7, 2011

வாரச் சந்தை - 07-02-2011

ஒரு தத்துவம் 


மிளகாயைப் பொடி பண்ணி மிளகாப்பொடி பண்ணலாம், ஆனா மூக்கைப் பொடி பண்ணி மூக்குப் பொடி பண்றதில்லை.


ஒரு குவிஸ்


1989-ல் முதன்முதலாக பிரமிடைச் சுத்திப் பார்த்த ஒருவர்,  தன்னுடைய மனைவி மக்களுடன் பார்க்க  ஆசைப்பட்டார். அதே போல், 1956ல் வந்து தன் மனைவி மக்களுடன் அதே பிரமிடைச் சுற்றிப் பார்த்தார். இது எப்படி?

ஒரு பொன்மொழி 

தண்டிக்க மட்டுமல்ல, மன்னிக்கவும் வலிமை வேண்டும்.

ஒரு கவிதை 


தவழ்ந்தேன்,
தடுமாறி நின்றேன்
தள்ளாடி நடந்தேன்
புகழ்ந்தார்கள்,
"சமத்து" என்று!
தவழ்கிறேன்,
தடுமாறி நிற்கிறேன்
தள்ளாடி நடக்கிறேன்
ஏசுகிறார்கள்,
"இவன் குடிகாரன்" என்று!

ஒரு ஜோக் 

ஆஸ்பத்திரியில் படுத்துக் கிடந்த நண்பனிடம் அவன் கேட்டான், "ஆபரேஷன் நல்ல படியா முடிஞ்சிடுச்சு, எப்படி இருக்கே?"
"நல்லா இருக்கேன், ஆபரேஷனுக்கு முன்னால, நர்ஸ் வந்து 'சின்ன ஆபரேஷன்தான் தான் கவலைப் படாதீங்க'ன்னு சொன்னதும்தான் எனக்கு பயம் வந்துடிச்சு!"
"இதில என்ன பயம் இருக்கு?"
"நர்ஸ் சொன்னது என்னிடம் இல்லை, ஆபரேஷன் செய்ய வந்த டாக்டர்கிட்ட!"

Saturday, February 5, 2011

இப்படி இருந்தா எப்படி இருக்கும்?



ஒருவர் சிற்பங்கள் விற்கும் ஒரு கடைக்கு போனார். அங்கே இருக்கும் சிற்பங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். அங்கே இருந்த ஒரு எலி சிலை மிக அருமையாக இருந்தது. அங்கே வந்த கடைக்காரர், "என்ன சார், இந்த சிலை ரொம்ப தத்ரூபமா இருக்கா? இந்த சிலை வேணும்னா வாங்கிக்குங்க, விலை ஐநூறு ரூபாய் ஆனா,இந்த சிலைக்குப் பின்னால ஒரு கதை இருக்கு, அதை சொல்லனும்னா ஐயாயிரம் ரூபாய் ஆகும்" என்றார்.
"கதை எல்லாம் வேணாங்க, சிலை மட்டும் கொடுங்க" என்று சொல்லிவிட்டு அந்த சிலையை வாங்கிக்கொண்டு போனார் அவர்.
கொஞ்ச தூரம் போனதும் பார்த்தால்  இரண்டு எலிகள் அவர் பின்னால் வந்து கொண்டிருந்தன. இன்னும் கொஞ்சதூரம் போனதும், சுமார் நூறு எலிகள் வந்தன. இன்னும் கொஞ்சதூரம் போனதும் ஆயிரக் கணக்கான எலிகள் அணிவகுத்து வந்தன. பதறிப்போன அவர், அந்த எலியை ஒரு ஆற்றில் வீசி எறிந்தார். உடனே, எல்லா எலிகளும் அந்த ஆற்றில் விழுந்து உயிர் விட்டன. ஒரு நிமிடம் திகைத்த அவர் விடுவிடுவென்று அந்தச் சிற்பக் கடைக்கு போனார்.

கடைக்காரர் அவரைப் பார்த்து, "நீங்க வருவீங்கன்னு தெரியும், அந்த எலிசிலை பின்னால உள்ள கதை பத்திதான கேக்கப் போறீங்க?" என்று கேட்டார்.

அவர் சொன்னார், "அதெல்லாம் இல்லை, உங்ககிட்ட அரசியல்வாதி சிலை இருக்கா?"

டிஸ்கி: மொக்கை போட்டு ரொம்ப நாள் ஆச்சுன்னு நினைக்கிறேன். பீ ரெடி!