அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, April 25, 2011

வாரச் சந்தை - 25.04.2011

தத்துவம் 
என்னதான் நாம வித்தியாசமா சொல்ல வந்தாலும் "என்னதான்"னு ஆரம்பிக்கும்போதே நாம தத்துவங்களைக் கிண்டல் அடிக்கப் போறோம்னு எல்லாருக்குமே புரிஞ்சுடும்.

நீதி:  தத்துவம் இப்போதைக்கு ஸ்டாக் இல்ல!

பொன்மொழி

ஆயிரம் வார்த்தைகள் மூலம் நாம் சொல்லும் அறிவுரையைவிட ஒரே ஒரு முறை நாமே கடைப்பிடிக்கும்போது அது எளிதில் மற்றவருக்குப் புரிந்துவிடும். 

ஜோக்

ஒரு கல்லறைக்கு முன்னால் ஒருவர் நின்று கொண்டு அழுது கொண்டிருந்தார், "இவ்ளோ சீக்கிரம் ஏன் நீ செத்தே?" என்று கதறி அழுதார். ரொம்ப நேரம் இப்படி அழுது கொண்டிருக்கவே, பார்த்துக் கொண்டிருந்த மற்றொருவர் இவரிடம் வந்து, "அவ்ளோ அன்பா செத்தவங்க மேல? அந்த அளவுக்கு உங்களைத் துயரத்தில் ஆழ்த்தி இறந்து போனது யார்? உங்க அம்மாவா, மனைவியா, குழந்தையா?"

அழுது கொண்டிருந்தவர் சொன்னார், "என் மனைவியோட முதல் புருஷன்!" 


குவிஸ்

நீளமான இசைக்கருவி எது தெரியுமா?

புல்longகுழல்!   


கவிதை 


அரசனை
ஆண்டியாக்கி
ஆண்டியை
அரசர்கனாக்கும்
சக்தி
ஆண்டவனுக்கு
மட்டும் அல்ல,
எனக்கும் உண்டு
தேர்தலின்போது மட்டும்!


Monday, April 18, 2011

வாரச் சந்தை - 18.04.11

தத்துவம்
ஒருக்கால் பாண்டிச்சேரி பக்கம் போனா...................................இன்னொரு காலும் அங்கதான் போகும். அதுதான் மனித உடல் நியதி! 
பொன்மொழி
யாருக்கும் அறிவுரை கூற உங்களுக்கு அருகதை உண்டு, நீங்கள் அந்த அறிவுரையை மீறாதவரை!
குவிஸ்

இந்த உலகத்தில முதல் ஸ்டெனோகிராபர் யாரு தெரியுமா?

பிள்ளையார்தான். அவர்தான் வியாசர் சொல்லச் சொல்ல மகாபாரதம் எழுதினாரு.

ஜோக்
அவன்: நீதானடா, எது வாங்கினாலும் ரெண்டு மூணு இடத்தில விலை விசாரிச்சுட்டு வாங்கச் சொன்னே?
இவன் : உண்மைதான்டா, அதுக்காக ரெண்டு ரூபாய்க்கு ஸ்டாம்ப் வாங்கக் கூட ரெண்டு மூணு போஸ்ட் ஆபீஸ் போய் விசாரிச்சுட்டு வாங்கறியே, நியாயமா?

 
கவிதை 

உன்னைக் கண்டதும்
உள்ளம் நடுங்குகிறது
வாய் குழறி
வார்த்தை தடுமாறுகிறது
..
..
..
..
..
..
..
இப்போதான் புரியுது
ஈட்டிக்காரன் சவகாசமே
இருக்கக் கூடாதென்று!

Friday, April 15, 2011

மாப்பிள்ளை - மக்களைக் கவர்ந்த மசாலாப் படம்


பொதுவாகவே ரஜினியின் படங்களை எல்லாம் ரசித்துப் பார்ப்பவன் நான்.


மசாலா ரசிகர்கள் ரஜினியின் படங்களில் அநேகமாக எல்லாவற்றையுமே ரசித்துப் பார்த்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் ரஜினி அமலா இணைந்து நடித்த மாப்பிள்ளை படம்.

ஸ்ரீவித்யா ஒரு சிறந்த குணசித்திர நடிகை என்பதை இந்தப் படத்திலும் நன்றாக புரிய வைத்திருப்பார். கொடுமைக்கார மாமியாராகவும் திமிர் பிடித்த பணக்காரியாகவும் மிடுக்காக அவர் பேசும் வசனங்கள் சூப்பர்! கொஞ்ச நேரமே வந்தாலும் ஜெய்சங்கர் தன்னுடைய இயல்பான நடிப்பால் மனதில் நிறைந்து விடுவார். காமெடியுடன் கூடிய வில்லன்களாக வினு சக்கரவர்த்தி, நிழல்கள் ரவி, எஸ்.எஸ்.சந்திரன் கலக்கியிருப்பார்கள்.

வெறும் ஆடல் பாடலுக்கு மட்டும் பயன்படுத்தப் பட்டாலும் அமலா நன்கு பரிமளித்திருப்பார், இந்தப் படத்தில் சிரஞ்சீவி தயாரிப்பில் ஒரு சூப்பர் மசாலா படத்தை நமக்குத் தந்திருந்தார் இயக்குனர் ராஜசேகர்.

தொண்ணூறுகளில் ரஜினி படங்கள் என்றால் கூட்டம் அலை மோதிய நேரம் அது; ரஜினி மக்களைக் காந்தம் போல் ஈர்த்தவர். இதனாலேயே, "என்னோட ராசி நல்ல ராசி, அது எப்போதும் பெரியவங்க ஆசி" என்று அவருக்காகவே எழுதியதுபோல் ஒரு பாடல் இந்தப் படத்தில் வரும்.  

மசாலாப் படங்களுக்கே உரிய முறையில் தங்கச்சி செண்டிமெண்ட், வீரம், காதல், சண்டை என்று சுவையான கலவையில் மக்களைக் கவர்ந்த படம், ரஜினி நடித்த மாப்பிள்ளை.


டிஸ்கி: இப்ப வந்த படத்தைப் பத்திப் பேசாம, பழைய படத்தைப் பத்தி எழுதிட்டேன்னு கோபிக்காதீங்க.  போன வாரம் பூரா டிவி பாத்த எபக்ட் தான். ஜெயா டிவில பார்த்தா, வடிவேலு முன்னாடி ஜெயலலிதாவைப் பாராட்டினதைப் போட்டாங்க; கலைஞர் டிவில பார்த்தா, சரத்குமார் எப்பவோ கருணாநிதியைப் பாராட்டினதைப் போட்டாங்க. அதான், நானும் எப்பவோ பார்த்த மாப்பிள்ளை படத்தைப் பத்தி எழுதிட்டேன். ஹிஹி!
ஆனா ஒண்ணு, இப்ப வந்த படத்தோட ஸ்டில் ஒண்ணும் போட்டுட்டேன், ஓகேதானே?

Thursday, April 14, 2011

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!




இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகள். 

பொதுவாக அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் நல் வாழ்த்துகள்!

எல்லா நலமும் பெற்று அனைவரும் இனிதே வாழ இறைவன் திருவடிகளில் இறைஞ்சுகிறேன்!


இன்று  பிறந்த நாள் காணும் நம்ம கோகுலத்தில் சூரியன் வெங்கட் அவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்!..................(என்று எழுதச் சொன்னது வெங்கட் தான்னு நான் சொல்ல மாட்டேன்!)






Wednesday, April 13, 2011

பதிவர்கள் வோட்டுப் போடப் போனால்

பதிவர்கள் வாக்குச் சாவடியில்:

"அங்க என்னங்க தகராறு?"

"ஒரு பதிவர், மைனஸ் வோட்டு போட பட்டன் ஏன் இல்லைன்னு கேட்டுக் கத்திக் கிட்டிருக்காரு"

*****

"அந்தப் பதிவர் ஏன் கோபமா இருக்கார்?"

"வோட்டு மட்டும்தான் போட முடியுது, பின்னூட்டம் எழுத வசதி இல்லையாம்"

*****


"அந்தப் பதிவர் என்ன பிரச்சினை பண்ணினாரு?"

"காலையிலே ஒரு வோட்டு போட்டுட்டு மதியம் மறுபடியும் வோட்டுப் போடுவேன்னு சொன்னாரு, கேட்டா மீள்பதிவுன்னு சட்டம் பேசுறாரு"

****


தேர்தல் அலுவலர் ஒரு பதிவரிடம்: "மிஸ்டர், எத்தனை தடவை சொல்றது? நீங்கதான் முதல் வோட்டு போட்டிருக்கீங்க, அதுக்காக 'வடை எனக்கே'ன்னு ரிஜிஸ்டர்ல எழுதிட்டுப் போக அனுமதிலாம் கொடுக்க முடியாது"

*****

தேர்தல் அலுவலர் பதிவரிடம்: "இத பாருங்க, நீங்க மத்தவங்க கமெண்டுக்குப் பதில் எழுதியே பழகியிருக்கலாம், அதுக்காக, முன்னாடி இருக்கறவர் எந்த சின்னத்துக்கு வோட்டுப் போட்டாருன்னு தெரிஞ்சாதான் நீங்க வோட்டுப் போட முடியும்னு சொல்றது சரியில்லை"

****

"அந்த வேட்பாளர் ஏன் தோத்துப் போனார்?"

"பதிவுலக ஞாபகத்தில, வோட்டுக்காக நான் ஏங்கியதே இல்லைன்னு பிரசாரத்தில பேசிட்டாராம்"

*****

Monday, April 11, 2011

வாரச் சந்தை - 11.04.11

தத்துவம் 

எல்லா ஆண்களும் முட்டாள்கள் இல்லை. சில பிரம்மச்சாரிகளும் இருக்கிறார்கள்.

பொன்மொழி 

அறிவுரை கூற எல்லோருக்கும் உரிமை உண்டு; அதை மற்றவர்கள் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்க மட்டுமே உரிமை இல்லை.

ஜோக் 

மனைவி கணவனிடம் : ஏங்க, நீங்க கண்ணாடியைக் கழட்டிட்டா, இருபது வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தீங்களோ, அப்படி எனக்குத் தெரியுது.

கணவன் : எனக்கும் அப்படிதான், இந்தக் கண்ணாடியைக் கழட்டிட்டா இருபது வருஷத்துக்கு முன்னாடி நீ எப்படி இருந்தியோ, அப்படி எனக்குத் தெரியுது! 

குவிஸ் 

மனைவிக்கும் மேனேஜருக்கும் என்ன வித்தியாசம்?

ரிடையர் ஆனப்புறம் மேனேஜரோட தொந்தரவு இருக்காது.

கவிதை

(கொஞ்சம் இங்கிலீஷ் கலந்திருக்கு, பொறுத்தருள்க!)

G-க்குப் பிறகு H  
என்பது உண்மைதான்
காந்திக்குப் பிறகு
ஹசாரேயைக் கண்டபின்!
H-க்குப் பின் I 
என்பதும் உண்மைதான்
ஹசாரேக்குப் பின் 
இந்தியாவே திரண்டபோது!  

Thursday, April 7, 2011

என்னுடைய வோட்டு தி.மு.க.வுக்கே!

நான் ப்ளாக் ஆரம்பிச்சு கிட்டதட்ட நாலு வருஷம் ஆச்சு. எழுத ஆரம்பிச்சு ஒன்றரை வருஷம் ஆச்சு.  நிறைய பேருடைய எழுது எனக்கு ரொம்பப் பிடிக்கும். சில பதிவர்கள் பதிவு எழுதும்போது ஆரம்பம் எல்லாம் நல்லா தான் இருக்கும். ஆனா முடிக்கும்போது மட்டும் சொதப்பிடுவாங்க.
ஆனா நிறைய பேரு எழுதறது எப்படி இருந்தாலும் பதிவை முடிக்கும்போது "அட"ன்னு ஆச்சரியப் பட வச்சுடுவாங்க.

என்னுடைய கருத்து என்னன்னா பதிவைப் படிக்கும்போது வர்ற உணர்வை விட அந்தப் பதிவோட கடைசி வரிகள் "நச்"னு இருந்தாதான் படிக்கறவங்க மனசுல ஒரு தாக்கத்தை உருவாக்கும். அந்த மாதிரி பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் 
அதுனால என்னோட வோட்டு திறமையா முடிக்கப்பட்ட ட்டுரைகளுக்குதான். அதாவது தி.மு.க.வுக்குதான். 

டிஸ்கி 1 :  ஆமாங்க, நான் இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் போடற வோட்டைப் பத்தித் தான் சொல்லிகிட்டிருக்கேன். 

டிஸ்கி 2 : என்னது, வரப் போற தேர்தல்ல போடற வோட்டைப் பத்தி சொல்லுவேன்னு வந்தீங்களா? சாரிங்க, தேர்தல்ல நாம யாருக்கு வோட்டு போடறோம்னு வெளிய சொல்லக் கூடாது, அது சட்டப் படி தப்பு!

டிஸ்கி 3 :  இந்தப் பதிவு தி.மு.க. வான்னு நீங்க போடற வோட்டுலதான் இருக்கு. வோட்டு போடுங்கன்னு சொல்லலை, போட்டா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன். 


Monday, April 4, 2011

வாரச் சந்தை - 04.04.2011

தத்துவம் 

உழைப்பும் ஊக்கமும் இருந்தா எந்தத் தடை வந்தாலும் ஜெயிச்சுடலாம், டீம்ல ஸ்ரீசாந்த் இருந்தும் இந்தியா உலகக் கோப்பை ஜெயிச்ச மாதிரி 

பொன்மொழி 

யாராலும் சீண்டப் படாமல் தகரம் மாதிரி இருப்பதை விட, நெருப்பில் உருக்கி புடம் போடப் படும் தங்கம் மாதிரி சோதனைகளை சந்தித்து வெல்வதே வாழ்வின் சிறப்பு!

குவிஸ் 

ஒருவர் தோற்க வேண்டும் என்று முயற்சி செய்து தோற்று விட்டால் அவர் ஜெயித்து விட்டாரா, தோற்று விட்டாரா?


ஜோக் 

ஒரு மாமியாரும் மருமகளும் டாக்டரிடம் சென்றார்கள். மாமியாரை பரிசோதித்த டாக்டர் மருமகளை அழைத்து சொன்னார்:
"இதோ பாருங்க உங்க மாமியாருக்கு டென்ஷன் அதிகமா இருக்கு. இப்படியே போனா ஒரு மாசத்துல அவங்க இறந்துடுவாங்க, அதுனால நீங்க என்ன பண்றீங்க, அவங்களை எந்த வேலையும் செய்ய விடாதீங்க, அவங்ககிட்ட மரியாதையாவும் அன்பாவும் நடந்துக்குங்க, குறிப்பா அவங்க எப்பவும் சந்தோஷமா இருக்கற மாதிரி பாத்துக்குங்க!"
வீட்டுக்கு வந்ததும் கணவன் கேட்டான், "டாக்டர் எங்க அம்மாவோட உடல்நிலை பத்தி என்ன சொன்னாரு?"
மனைவி சொன்னாள்,"அதிக பட்சம் ஒரு மாசம்தான் உயிரோட இருப்பாங்க போலிருக்கு"

கவிதை

கவிதையாய்
இருக்கிறது 
கட்சிகளின் 
தேர்தல் அறிக்கை
கவிதைக்குப் 
பொய் அழகு
என்பது உண்மைதானோ!