அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, April 18, 2011

வாரச் சந்தை - 18.04.11

தத்துவம்
ஒருக்கால் பாண்டிச்சேரி பக்கம் போனா...................................இன்னொரு காலும் அங்கதான் போகும். அதுதான் மனித உடல் நியதி! 
பொன்மொழி
யாருக்கும் அறிவுரை கூற உங்களுக்கு அருகதை உண்டு, நீங்கள் அந்த அறிவுரையை மீறாதவரை!
குவிஸ்

இந்த உலகத்தில முதல் ஸ்டெனோகிராபர் யாரு தெரியுமா?

பிள்ளையார்தான். அவர்தான் வியாசர் சொல்லச் சொல்ல மகாபாரதம் எழுதினாரு.

ஜோக்
அவன்: நீதானடா, எது வாங்கினாலும் ரெண்டு மூணு இடத்தில விலை விசாரிச்சுட்டு வாங்கச் சொன்னே?
இவன் : உண்மைதான்டா, அதுக்காக ரெண்டு ரூபாய்க்கு ஸ்டாம்ப் வாங்கக் கூட ரெண்டு மூணு போஸ்ட் ஆபீஸ் போய் விசாரிச்சுட்டு வாங்கறியே, நியாயமா?

 
கவிதை 

உன்னைக் கண்டதும்
உள்ளம் நடுங்குகிறது
வாய் குழறி
வார்த்தை தடுமாறுகிறது
..
..
..
..
..
..
..
இப்போதான் புரியுது
ஈட்டிக்காரன் சவகாசமே
இருக்கக் கூடாதென்று!

10 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan Srinivasagopalan said...

//இந்த உலகத்தில முதல் ஸ்டெனோகிராபர் யாரு தெரியுமா?

பிள்ளையார்தான். அவர்தான் வியாசர் சொல்லச் சொல்ல மகாபாரதம் எழுதினாரு. //

அதுனாலத்தான் எழுதுறதுக்கு முன்னாடி
பிள்ளையாருக்கு வணக்கம் -- சுருக்கமா '௨' னு எழுதுறோமா ?

Madhavan Srinivasagopalan said...

கம்பியூட்டர் கிராபிக்ஸ் கூட பிள்ளையாத்தான் படைச்சாரா ?

Speed Master said...

கவித எங்க காணோம்

வந்தேன் வாக்களித்து சென்றேன்


கலைஞர் கருணாநிதி பற்றி சிறு குறிப்புகள்
http://speedsays.blogspot.com/2011/04/blog-post_18.html

Chitra said...

அவன்: நீதானடா, எது வாங்கினாலும் ரெண்டு மூணு இடத்தில விலை விசாரிச்சுட்டு வாங்கச் சொன்னே?
இவன் : உண்மைதான்டா, அதுக்காக ரெண்டு ரூபாய்க்கு ஸ்டாம்ப் வாங்கக் கூட ரெண்டு மூணு போஸ்ட் ஆபீஸ் போய் விசாரிச்சுட்டு வாங்கறியே, நியாயமா?


.....ha,ha,ha,ha,ha....

Chitra said...

Where is the kavithai?

ஸ்ரீராம். said...

என் வோட்டு ஜோக்குக்கு....

Unknown said...

ஹி ஹி நல்லா இருக்குங்க

HVL said...

//
இப்போதான் புரியுது
ஈட்டிக்காரன் சவகாசமே
இருக்கக் கூடாதென்று!
//
:):):)

வெங்கட் said...
This comment has been removed by the author.
வெங்கட் said...

// இந்த உலகத்தில முதல் ஸ்டெனோகிராபர்
யாரு தெரியுமா? பிள்ளையார்தான். //

அப்புறம்...

இமயமலையில முதன் முதலா
ஏறினவரு சிவ பெருமான்..,

உலகத்துலயே முதல் Inter Caste Marriage
பண்ணினவரு முருகன்..

உலகத்துலயே முதன் முதலா கடல்ல
பாலம் கடினவரு ராமன்..

இதெல்லாம் சொல்லல..?