அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, March 15, 2012

மகளிர் தினம் - கவிதை

எங்கள் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நான் அரங்கேற்றிய கவிதை கீழே:

பெண்ணிற் பெருந்தக்க யாவுள
இது
பொய்யாமொழிப் புலவனின் வாக்கு
பொருள் பொதிந்த பொருத்தமான வாக்கு

அகிலத்தையே ஆளும் ஈசனும்
அம்மைக்குள் அடக்கம்
இது
அவ்வையின் தமிழ் பாட்டு
இதற்குண்டோ ஒரு எதிர் பாட்டு?
பெண்ணின் பெருமையை
எண்ணிடத் துணிந்தேன்
என்னே என் மடமை!
பேராழியின் அலையை
எண்ணிடத் துணிந்தால்
இதுவும் சாத்தியமே!

அன்னையாய் வந்து
என் பசி தீர்த்தது ஒரு பெண்
அருந்தமிழ் வந்து
கற்பித்ததும் ஒரு பெண்
சிறுபிள்ளை விளையாட்டிலே
ஆனந்தம் தந்தது ஒரு பெண்
சீரான கல்லூரி வாழ்வில்
நட்பின் இலக்கணம் வகுத்தது ஒரு பெண்
தமக்கையாய், தங்கையாய்
உறவின் பெருமை தந்தது ஒரு பெண்
வாழ்வில் வளம் பொங்க
வாழ்க்கை நலம் சிறக்க
வந்தாள் குலம் விளங்க
ஒரு பெண் -என் மனைவியாய்
தந்தாள் குலம் சிறக்க
இரு பெண்கள் - குழந்தைகளாய்
இப்படி
என்னை சுற்றி
எத்தனைதான்  பெண்கள்
அவர்களே
என் அறிவுக்கண் திறந்த கண்கள்
பெண்கள் வீட்டின் கண்கள்
அல்ல
அவர்கள் நாட்டின் கண்கள்
பெண்மையைப் போற்றுவோம்
பெண்மையைப் போற்றுவோம்
நாட்டின் நன்மையைக் கருதினால்
பெண்மையைப் போற்றுவோம்

13 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

கௌதமன் said...

கொஞ்சம் லேட்டு. ஆனாலும் நல்லா இருக்கு.

வெளங்காதவன்™ said...

:-)

middleclassmadhavi said...

சூப்பருங்க!!

நன்றி!

விச்சு said...

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.

Madhavan Srinivasagopalan said...

முண்டம்.. முண்டம்.. (என்னச் சொன்னேன்)...
டைட்டில படிக்காம எதுக்கு மேட்டர படிச்ச.. என்னனே தெரியல.. புரியல.. டைட்டில படிச்ச பின்னாடிதான் தெரிஞ்சது.. -- இது கவிதையாம்..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு....

cho visiri said...

Good dialogue.
But, I fail to understand as to how you call it as Poetry...?

cho visiri said...

Good meaningful dialogue.
But, onefails to understand as to how
the work can be termede a "Kavithai"?

cho visiri said...

Good dialogue.
But, I fail to understand as to how you call it as Poetry...?

MatureDurai said...

"மகளிர் தினம்" கவிதை என் மனதைத்
தொட்டது!
ஆம்! இது ஒரு கவிதையேதான்!
அதாவது,புதுக்கவிதை!
(யாப்பிலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படுவது மரபுக்கவிதை ஆகும்)
கவிஞருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Sakthi said...

nalla sinthanai.. anaithu aangalukkum thevaiyaana sinthanai..

Unknown said...

penmayai potriya
poramai illa -nal
ullam neer.....
vazha.........!

Unknown said...

penmayai potriya
poramai illa -nal
ullam neer.....
vazha.........!